உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் அரசு அளிக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மாணவ மாணவிகள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதேபோல் 4 மாணவர்கள் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளிலும், 8 மாணவர்கள் அரசு சட்டக் கல்லுாரிகள், 17 மாணவர்கள் வேளாண்மை கல்லுாரிகள், 206 மாணவர்கள் பொறியியல் கல்லுாரிகள் என மொத்தம் 256 பேர் இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்ற 21 மாணவ, மாணவிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் அழைத்து மருத்துவ அங்கிகள் பரிசாக வழங்கி பாராட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை