மேலும் செய்திகள்
பட்டமளிப்பு விழா கள்ளக்குறிச்சி
31-Mar-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கே.ஜி., வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, சூளாங்குறிச்சி, பாலாஜி பேலஸில் நடந்தது. பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நடப்பாண்டு கே.ஜி., வகுப்பில் பயின்ற 90 மாணவ-மாணவியருக்கு, பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கி, சிறப்புரையாற்றினார். தாளாளர் ஜனனி, நிர்வாகி ரவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்று, மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகள், தேர்வுகள் குறித்து பேசினார். பள்ளியின் வளர்ச்சி, செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. நிகழ்ச்சியில் துணை முதல்வர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
31-Mar-2025