உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறைகேட்புக் கூட்டம்: 547 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்: 547 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 547 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பட்டா மாற்றம், நிலம் அளவீடு, வீட்டு மனைப்பட்டா கோருதல், தொழில் தொடங்க கடனுதவி, சாலை வசதி ஏற்படுத்தி தருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக 547 மனுக்கள் பெறப்பட்டது.பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை