மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
14-Feb-2025
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தயாநிதி தலைமை தாங்கினார். செயலாளர் சார்லஸ் விக்டர் விளக்கவுரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர் குமாரதேவன் கண்டன உரையாறறினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரவி, ஆறுமுகம், சாமிதுரை, வீரபுத்திரன், செந்தில்முருகன், வேளாங்கண்ணி, மணிமாறன் பங்கேற்றனர். காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும். சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை 2,715 ஆக நிர்ணயிக்க கோரி சுகாதாரத்துறை இயக்குனர் அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் கவுதம் நன்றி கூறினார்.
14-Feb-2025