உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வீட்டில் துப்பாக்கி தயாரித்தவர் கைது மூலப்பொருட்கள் பறிமுதல்

 வீட்டில் துப்பாக்கி தயாரித்தவர் கைது மூலப்பொருட்கள் பறிமுதல்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டில் கள்ள துப்பாக்கி தயாரித்த நபரை போலீசார் கைது செய்து மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 6:00 மணிக்கு அப்பகுதிக்குச் சென்று ஜேம்ஸ்பீட்டர், 45; என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 3 ஏர்கன் துப்பாக்கி, ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 5 கிலோ பாஸ்பரஸ் கருப்பு வெடி மருந்து, நாட்டு துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றினர். தொடர்ந்து ஜேம்ஸ்பீட்டர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை