உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவியை தாக்கிய கணவன் கைது

மனைவியை தாக்கிய கணவன் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி, 40 இவரது மனைவி மகாலட்சுமி,36; கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் காலை 9:15 மணிக்கு மகாலட்சுமி, அவரது உறவினர் கவிதா இருவரும் சங்கராபுரம் சென்றனர். அப்போது அங்கு எதிர்பாராவிதமாக முரளி அவர்களை சந்தித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது. தொடர்ந்து முரளி கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, முரளியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை