உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத் திறனாளிக்கான ஸ்கூட்டரை பிறர் பயன்படுத்தினால் நடவடிக்கை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் எச்சரிக்கை

மாற்றுத் திறனாளிக்கான ஸ்கூட்டரை பிறர் பயன்படுத்தினால் நடவடிக்கை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை பிறர் பயன்படுத்தினால் சட்டப்படி குற்றமாகும்.மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி செய்திக்குறிப்பு:மாவட்டம் முழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அரசு மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டில் 220 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2023-2024ம் ஆண்டில் 415 பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் வாகனத்தில் இணைப்பு சக்கரத்தை பிரித்து எடுத்து விட்டு சாதாரண ஸ்கூட்டராய் மாற்றுத் திறனாளி அல்லாதோர் பயன்படுத்தி வருவது தெரிய வருகிறது.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், மாற்றுத்திறனாளிக்கான ஸ்கூட்டர்களை வேறு நபர்களுக்கு விற்பதும் சட்டபடி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தெரிந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் பெற வேண்டி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வழங்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அறிந்துகொள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்கியல் வல்லுனரை அலுவலக நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை