அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
சின்னசேலம் : சின்னசேலம் பகுதியில் 4 அங்கன்வாடி மைய கட்டடங்களின் திறப்பு விழா நடந்தது.சின்னசேலம் அடுத்த ராயர்பாளையம், நைனார்பாளையம், அனுமனந்தல் மற்றும் செம்பாகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 4 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி திறந்து வைத்தார். ஆத்மா தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா, பி.டி.ஓ., ரந்கராஜன், அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர்கள் சாந்தி, பஞ்சவர்னம் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.