மேலும் செய்திகள்
கமிட்டியில் ரூ.13.92 லட்சம் வர்த்தகம்
12-Nov-2024
மகாராஷ்டிராவில் ஷிண்டே வியூகம் வெற்றி!
23-Nov-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை காரணமாக நேற்று மார்க்கெட் கமிட்டிகளுக்கு விளைபொருட்கள் வரத்து வெகுவாக குறைந்தது.கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு, மக்காச்சோளம் 70 மூட்டை, உளுந்து 3 என 73 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,145 ரூபாய்க்கும், உளுந்து 7,299 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 946 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 70 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,040 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83க்கு வர்த்தகம் நடந்தது.தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் புயல் மழை பாதிப்பு காரணங்களினால், விவசாயிகள் யாரும் விளைபொருட்களை எடுத்து வரவில்லை. இதனால் கமிட்டியில் நேற்று வர்த்தகம் நடக்கவில்லை.புயல் மழை காரணங்களினால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்தது. இதனால் கமிட்டியில் வர்த்தகம் வெகுவாக குறைந்துபோனது.
12-Nov-2024
23-Nov-2024