உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை நாள்தோறும் கண்காணிக்க அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை நாள்தோறும் கண்காணிக்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி மாணவர்களின் வருகைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, பழுது பார்த்தல் தேவையுள்ள பள்ளிகளின் விவரங்கள் கேட்டறிந்து பொதுப்பணித்துறையின் மூலம் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டது.பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், குறித்த நேரத்திற்குள் பள்ளியை அடையும் வகையில் கோரிக்கை உள்ள இடங்களில், கூடுதல் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு வருகை புரியாத மணவர்கள் மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களை தேர்ச்சியடையச் செய்யும் பொருட்டு 1:5 என்ற விகிதாச்சாரத்தில் ஆசிரியர்களுக்கு பிரித்து கொடுத்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து, முதல் மாதாந்திர தேர்வு தேர்ச்சி அறிக்கை பள்ளி வாரியாக ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் சி.இ.ஓ., கார்த்திகா, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை