உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

சங்கராபுரம், : சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர, மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் உள்ளன. இதில்,10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஆண்டிலும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக, 2,ம் ஆண்டிலும் சேரலாம்.மாணவர்களுக்கு இலவச விடுதி, மத்திய,மாநில அரசுகளின் உதவித்தொகை உள்ளிட்டவை பெற்றுத்தரப்படும். மேலும், மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படும். கல்லுாரியில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என, முதல்வர் லலிதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை