முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு
கள்ளக்குறிச்சி : தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடு கோவில்களை சீரமைக்கவும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில், முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் வரும், 22ம் தேதி நடக்கிறது. அதற்கான அழைப்பிதழ்களை பா.ஜ., சார்பில் கள்ளக்குறிச்சி நகரில், வீடுகள் தோறும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பா.ஜ., தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சின்னபொண்ணு, கிளை செயலாளர் சத்யா, மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.