உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருநங்கைகளுக்கு கனவு இல்ல திட்ட ஆணைகள் வழங்கல்

திருநங்கைகளுக்கு கனவு இல்ல திட்ட ஆணைகள் வழங்கல்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்ட ஆணைகளை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட செம்மனந்தல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 24 திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டன.மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விரைந்து வழங்கிடவும், பணிகளை முறையாக கண்காணித்திடவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆணை பெற்ற திருநங்கைகள் விரைந்து வீடு கட்டி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருநாவலுார் பி.டி.ஓ., செந்தில் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ