மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு முன்னோடி கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரி கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா பெருமிதம்
மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதில் முன்னோடியாக கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரி திகழ்கிறது.கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா கூறியதாவது:கள்ளக்குறிச்சி அடுத்த மேலுாரில் 27 ஆண்டுகளாக தொழிற்கல்வியில் பங்காற்றி வரும் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில், தொழிற்கல்வி பாட பிரிவுகளில் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் (பகுதி நேரம்) ஆகிய பாட பிரிவுகள் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது.கல்லுாரியில் விடுதி வசதி, ஆய்வகங்கள், கட்டடங்கள், நுாலகம் ஆகியவை இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளில் பல ஆண்டுகளாக தொடர்ந்து 700 / 700 மதிப்பெண் பெற்று பல மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்களையும், தேர்ச்சி பெற வைக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயிலவும், சிறப்பு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.இதுவரை 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பல்வேறு எம்.என்.சி., நிறுவனங்களில் பணியமர்த்தி சாதனை படைத்துள்ளது. கல்லுாரி பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும், தொழிற்கல்வி பயிலும் விதத்தில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பகுதி நேர சிறப்பு பாட பிரிவு செயல்படுகிறது.மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழா, சுற்றுலா, தொழிற்சாலைகளை பார்வையிடுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கல்லுாரி தாளாளர் கூறினார்.