மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்றவர் கைது
06-Nov-2024
சின்னசேலம் : பங்காரம் ஏரியில் மண் கடத்திய 4 டிராக்டர்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று 2 மணியளவில் அரசு அனுமதியின்றி சிலர் முறைகேடாக டிராக்டர்களில் மண் அள்ளி உள்ளனர். தகவலறிந்த சின்னசேலம் சப் இன்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் பங்காரம் கிராமத்தை சேர்ந்த வேலு மகன் முத்துவேல் 23, இந்திலி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் திருநாவுக்கரசு 28, போவிசன் மகன் தமிழ்செல்வன் 27, உலங்காத்தான் ராஜேந்திரன் மகன் சுரேஷ் 29, ஆகியோர்களை கைது செய்து, மண் கடத்தலுக்கு பயண்படுத்திய 4 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்ததனர். மேலும் இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Nov-2024