மேலும் செய்திகள்
அரசு கலை கல்லுாரியில் யோகா பயிற்சி வகுப்பு
20-Jun-2026
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சிங்கப்பெண் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் தர்மராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி கண்காணிப்பாளர் மகேஷ் வரவேற்றார். சிங்கப்பெண்கள் படைப்பிரிவின் சப்இன்ஸ்பெக்டர் பரிமளா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிங்கப்பெண் படையின் பணிகள், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் செயல்பாடுகள் மற்றும் 1091 என்ற எண் மூலம் புகார் அளிப்பது உள்ளிட்ட தகவல்களை விளக்கினார். கல்லுாரியின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.
20-Jun-2026