மேலும் செய்திகள்
மலேரியா விழிப்புணர்வு
25-Apr-2026
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குமார் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் கலந்து கொண்டு, மலேரியா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, வீட்டில் உபயோகிக்கும் தண்ணிர் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், பாத்திரங்கள் ஆகியவற்றை முடிவைத்து உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேந்திர குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Apr-2026