மேலும் செய்திகள்
பைக் எரிப்பு போலீஸ் விசாரணை
06-Mar-2025
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். வாணாபுரத்தை சேர்ந்த, 37 வயது பெண் ஒருவர் கடந்த, 13ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது இளையனார்குப்பத்தை சேர்ந்த தனக்கோட்டி மகன் பிரசாந்த்,25; என்பவர், பாலியல் உறவிற்கு வற்புறுத்தினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவரை தாக்கி பிரசாந்த் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
06-Mar-2025