மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற பெண்கள் கைது
23-Sep-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, 76 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 60; இவர் அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். கடையில் 76 கிலோ பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்னர். இது தொடர்பாக வி.ஏ.ஓ., கீதா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் கடை உரிமையாளர் சுபாஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
23-Sep-2025