மணம்பூண்டி விவேகானந்தா பள்ளி மாணவிகள் பேட்மிட்டன் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்
திருக்கோவிலுார்: மணம்பூண்டி, விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் பிடித்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 24ம் தேதி மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் மணம்பூண்டி, விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளி மாணவிகள் ஜீவாஸ்ரீ, ஆஷிகா ஆகியோர், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பேட்மிட்டன் இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். இருவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் முருகன், பள்ளி முதல்வர் இந்திரா பாராட்டி பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.