மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வாளராக இருந்த செல்வம் பதவி உயர்வு பெற்று சிதம்பரத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்த மாணிக்கம் கள்ளக்குறிச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளாராக மாணிக்கம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக பணியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.