உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகரில் உள்ள துருகம் சாலை மற்றும் சேலம் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள் உட்பட நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் உள்ளது.இந்நிலையில், பல இடங்களில் உள்ள சாலையோர பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திசெல்லும் தருணத்தில் சாலையோர பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே, நகரில் போக்குவரத்து மிகுதியாகன சாலைகளில் பள்ளங்களை சீரமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை