உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பராமரிப்பின்றி வீணாகி வரும் பல்நோக்கு மைய கட்டடம்

பராமரிப்பின்றி வீணாகி வரும் பல்நோக்கு மைய கட்டடம்

கள்ளக்குறிச்சி: க.அலம்பலம் ஊராட்சியில் 3.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பலம் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருக்கனங்கூர், பொன்பரப்பட்டு சிற்றுார்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் 3.20 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்க மைய கட்டடம் கட்டி திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இதனை முறையாக பராமரிக்காததால், இந்த கட்டடத்தைச் சுற்றிலும் முட் புதர்கள் மண்டி பயனற்று உள்ளது. அரசுப் பணத்தை வீணடித்து, முறையான பராமரிப்பும் பயன்பாடும் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் இக்கட்டடத்தால் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாருக்கும் பயன்படாமல் இருக்கும் இந்த பல்நோக்கு கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !