ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தின விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தின விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இயந்திரப் பொறியியல் துறை சார்பில் தேசிய விளையாட்டு நாள் விழா, 'விளையாட்டு உணர்வு, இந்தியா உணர்வு' என்ற தலைப்பில் நடந்தது. ஏ.கே.டி. கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவகுமரன் முன்னிலை வகித்தார். பெரம்பலுார் மாவட்ட உடற்கல்வி இயக்குனர் அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து ஒற்றுமை, உடல் நலம் மற்றும் மன உறுதியை வளர்க்கும் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.