உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணத்திற்காக மூதாட்டி கொலை பக்கத்து வீட்டு வாலிபர் கைது

பணத்திற்காக மூதாட்டி கொலை பக்கத்து வீட்டு வாலிபர் கைது

ரிஷிவந்தியம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூரை சேர்ந்தவர் சின்னபொண்ணு, 72; மே 10ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த, 6 கிராம் தங்க கம்மல், வீட்டிலிருந்த பணம் திருடு போயிருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பகண்டை கூட்ரோடு போலீசார் விசாரித்து வந்தனர்.மூதாட்டியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேஷ், 20, என்பவரிடம் விசாரித்ததில், அவர் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஏசி மெக்கானிக் படித்துள்ள அவர், கடந்த 9ம் தேதி, மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, மூதாட்டி பணம் வைத்திருந்த, 'பர்சை' திருடியுள்ளார். மூதாட்டி சத்தம் போட்டதால், சேலையால் அவரது வாயை பொத்தி, கழுத்தை நெரித்துள்ளார். இதில், மூச்சுத்திணறி மூதாட்டி இறந்ததும், நகை, பணத்தை எடுத்து தப்பினார். கணேஷை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ