கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், எம்.ஆர்.என்., நகர், நுாற்றாண்டு மண்டபத்தில், ரோட்டரி சங்க 2025-26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நபந்தது.நிகழ்ச்சியில் புதிய தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் முருகன் ஆகியோருக்கு, சிறப்பு விருந்தினர்கள், ரோட்டரி மாவட்ட ஆளுநர் லோகநாதன், துணை ஆளுநர் மூர்த்தி, வருங்கால ஆளுநர் செந்தில்குமார் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். முன்னாள் நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், பாபு வாழ்த்தி பேசினர். முன்னாள் தலைவர் ஞானராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். புதிய நிர்வாகிகள் சார்பில் ரோட்டரி பவுண்டேஷனுக்கு போலியோ சொட்டு மருந்து நிவாரண நிதியாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் பெருமாள், ராமலிங்கம், சுரேஷ்பாபு, முத்துசாமி, மனோகர்குமார், இமானுவேல் சசிக்குமார், ஆதிகேசவன், மதியழகன், செல்வகுமார் மற்றும் இயக்குனர்கள் மதியழகன், விஜயசேகர், சேகர், பாண்டியன், கோவிந்தன், முத்துராமலிங்கம், சசிக்குமார், வேல்முருகன், திருவாசகமணி, அம்பேத்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.