உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

சங்கராபுரம்: விரியூர், இம்மாகுலேட் மகளிர் கல்லுாரி சார்பில், அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 5 நாட்கள் நடந்த என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் லில்லிமேரி தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் பினியன்மேரி குருசம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் வசந்தகுமாரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாந்தகுமார், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், நெடுமானுார் பாரதியார் தமிழ்ச்சங்க தலைவர் கதிர்வேல், சாதிக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீத்தாபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு, ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் பரிசு வழங்கினார்.என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை