உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே பைக் மோதிய விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.வாணாபுரம் அடுத்த லாலாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி முகமது மனைவி பாத்திமா, 68; இவர், கடந்த 18ம் தேதி இரவு 7:00 மணியளவில் அதே பகுதியில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது தியாகதுருகத்தில் இருந்து மணலுார்பேட்டை நோக்கிச் சென்ற பைக் பாத்திமா மீது மோதி விட்டு நிற்காமல்சென்றது.இந்த விபத்தில் படுகாயமடைந்த பாத்திமா சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி