பேக்கேஜிங் தொழில் நுட்பம் ஒரு நாள் பயற்சி முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பேக்கேஜிங் தொழில்நுட்பம் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு பயற்சி முகாம் நடந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் சமீபத்திய தொழில் நுட்பங்கள் குறித்த தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிலையான பேக்கேஜிங் முறைகள். நவீன பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள், புதுமையான பேக்கேஜிங் தீர்வுகள் மற்றும் சந்தையின் சமீபத்திய வளர்ச்சி போக்குகள் குறித்து தொழில் முனைவோர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் நிலையான பேக்கேஜிங் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் ஜவுளி, கைவினைப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் பேக்கேஜிங், உணவு பேக்கேஜிங், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சமீபத்திய பேக்கேஜிங் போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பொறுப்பையும் முக்கிய பகுதியாக கருத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பயிற்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் 100க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சியில் பங்கேற்று பயன்பெற்றனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.