உள்ளூர் செய்திகள்

வெங்காயம் சாகுபடி

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, பாலப்பட்டு, வடபாலபட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, மூலக் காடு பகுதிகளில் விவ சாயிகள் சாம்பார் வெங்காயம் அதிக அள வில் சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான சாம்பார் வெங்காயம் பராமரிப்பு செலவு குறைவு. நன்கு வளர்ந்தவுடன் அறுவடை நேரத் தில் சேலம், திருச்சி, திருவண்ணாமலை பகுதி மொத்த வியாபாரிகள் நேரில் வந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் அறுவடை செய்யும் நாளிலேயே விவசாயிகளுக்கு அலைச்சலின்றி கைமேல் பணம் கிடைக்கிறது. சங்கராபுரம் பகுதியில் நடப்பு ஆண்டு 100 ஏக்கரில் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ