விழா மேடை திறப்பு விழா
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான விழா மேடை திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் விழா மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்தார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் வினோத், கிளை செயலாளர் பரசுராமன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.