மேலும் செய்திகள்
இயற்கை விவசாயம் மாணவர்களுக்கு பயிற்சி
29-Aug-2025
திருக்கோவிலுார், ;திருக்கோவிலுார் வேளாண்துறை அலுவலகம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. அட்மா திட்டத்தின் கீழ், அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இயற்கை வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி, துணை வேளாண்மை அலுவலர் மொட்டையாப்பிள்ளை தலைமை தாங்கினர். தியாகதுருகம் அடுத்த பழையசிறுவாங்கூர் கிராமத்தில் முன்னோடி இயற்கை விவசாயி ராமசாமி தனது வயலில் ரசாயனங்கள் இல்லாத முறையில் சாகுபடி செய்திருந்த கம்பு, நிலக்கடலை, மரவள்ளி, கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி பயிர்களை காண்பித்து அவற்றில் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள், பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்தல், பயிர் வளர்ச்சிக்கான மீன் அமிலம், பஞ்சகாவியம் தயாரிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகலாதன், செல்வன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
29-Aug-2025