உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளி மாணவர் அப்துல்ராஹீன் 493 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி சேத்தனா 492 மதிப்பெண்களுடன், மாவட்ட அளவில் 2,ம் இடம் பெற்றனர். கார்த்திகா, ஹரிசரண் ஆகிய இருவரும், தலா 488 மதிப்பெண்களுடன், பள்ளியில் 3ம் இடம் பெற்றனர். தமிழ் பாடத்தில் 5 பேர்; கணிதத்தில் ஒருவர்; செயற்கை நுண்ணறிவில் 4 பேர்; கணினி மேம்பாட்டியலில் 4 பேர்; சுற்றுலாவியலில் 3 பேர்; அழகுக்கலையில் 2 பேர்; என மொத்தம் 19 மாணவர்கள், 'சென்டம்' எடுத்துள்ளனர். மேலும், 450க்கு மேல் 29 பேரும், 400க்கு மேல் 68 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பாரத்குமார் கோப்பை வழங்கி கவுரவித்தார். பள்ளி செயலாளர் சாந்தி பாரத்குமார், முதல்வர் ஜாய்ஸ்ரெக்சி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !