உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சி செயலாளர்கள் மறியல் போராட்டம் அறிவிப்பு

ஊராட்சி செயலாளர்கள் மறியல் போராட்டம் அறிவிப்பு

உளுந்துார்பேட்டை: அக். 29-: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை; துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இரண்டாம் கட்டமாக இன்று 29ம் தேதி மாநில அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடக்க உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். வரும் 24ம் தேதி முதல் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் திட்டுமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை