உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம்

ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, 17 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சிறப்பு கவனம் எடுத்து ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். கூட்டத்தில், கருவூலத்துறை அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை