உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டுமனை பட்டா கேட்டு சின்னசேலம் மக்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு சின்னசேலம் மக்கள் மனு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். சின்னசேலத்தில் உள்ள கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குநர் சக்திகிரி தலைமையில் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சின்னசேலம் பேரூராட்சியில் திரு.வி.க.நகர், இந்திரா நகர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு, நிலம் ஏதுமில்லை. இதனால் அரசு புறம்போக்கு இடத்திலும், வாடகை வீட்டிலும் தங்கி நிரந்தரமற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். தினமும் கூலி வேலை செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்து கின்றனர். எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ