மேலும் செய்திகள்
சுடுகாடு பகுதியில் மனைப்பட்டா: இருளர்கள் தர்ணா
17-Jun-2025
கள்ளக்குறிச்சி; பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி பெண்கள் புகார் மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி துருகம் சாலை பழைய மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கல்லடி இன மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில்;நீலமங்கலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 1997ம் ஆண்டு 80 பேருக்கு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் பலர் வீடு கட்டி வசித்து வருகிறோம். அவ்விடத்தில் பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளி மற்றும் வருங்கால பொது பயன்பாட்டிற்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், மாற்று சமுதாயத்தை சேர்ந்த 25 பேருக்கு விதிகளை மீறி வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
17-Jun-2025