உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்பை அகற்ற மனு

ஆக்கிரமிப்பை அகற்ற மனு

ரிஷிவந்தியம்: பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் துணை தாசில்தாரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: சேரந்தாங்கலில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிய போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிக்க முயன்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்து கற்களை நட்டனர். ஆனால், மர்மநபர்கள் சிலர் கற்களை பிடுங்கி எறிந்ததால் ஊர் மக்கள் சார்பில் இரும்புவேலி அமைக்கும் பணியும் வி.ஏ.ஓ., அறிவுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டது. எனவே, இடத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோவில் விழாக்களை தடையின்றி நடத்த வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ