உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலியோ தின விழிப்புணர்வு ஊர்வலம்

போலியோ தின விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில், போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு, ரோட்டரி கிளப் செயலாளர் கவுதம்சந்த் வரவேற்றார். தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., பார்த்திபன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில், வித்யா மந்திர், சாரதா வித்யாஷ்ரம், லட்சுமி வித்யாலயா, விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். ரோட்டரி கிளப் மாவட்ட நிர்வாகி தேவசேனாதிபதி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசன், வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சுனில் குமார், விவேகானந்தா பள்ளி தாளாளர் முருகன், லட்சுமி வித்யாலயா பள்ளி தாளாளர் ராஜா சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை