மேலும் செய்திகள்
திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசு
20-Sep-2026
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாக்கம் அஞ்சல் நிலையத்தில் உலக அஞ்சல் தின விழா கொண்டாடப்பட்டது. சங்கராபுரம் வள்ளலார் பள்ளி, இன்னர்வீல் கிளப் இணைந்து பாக்கம் கிளை அஞ்சலகத்தில் நடந்த விழாவிற்கு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், குறிஞ்சி தமிழ்ச் சங்க செயலாளர் சக்திவேல் இன்னர்வில் முன்னாள் தலைவி அகல்யா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். போஸ்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு வரவேற்றார். இன்னர்வில் கிளப் தலைவி கீதா முருகன், செயலாளர் பார்கவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போஸ்ட் மாஸ்டர்கள் கோவிந்தராஜன், சரண்யா, போஸ்ட்மேன் மண்ணாங்க்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இன்னர்வீல் முன்னாள் தலைவி தீபா சுகுமார், ஆசிரியர் லட்சுமிபதி ஆகியோர் சேமிப்பின் அவசியம் பற்றியும், அஞ்சலகம் முலம் மாணவர்கள் சேமிக்கும் வழிமுறைகள், மற்றும் அங்சல்துறையில் சேவைகளை பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் 50 பேர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அண்ணாதுரை நன்றி கூறினார்.
20-Sep-2026