உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இதில், கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரில் டோல்கேட் அமைத்து, இவ்வழியாக செல்லும் கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.வரி வசூலிப்பது மட்டு மின்றி, தேசிய நெடுஞ்சாலையை பராமரித்தல், விபத்து ஏற்பட்டதால் உடனடியாக சென்று மீட்டு பணிகளை மேற்கொள்ளுதல், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், கழிப்பறை பராமரித்தல் உட்பட பல்வேறு வசதிகளை டோல்கேட் நிர்வாகம் செய்ய வேண்டும்.இந்நிலையில், மாடூர் டோல்கேட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கும் போது டிரைவர்கள் மற்றும் பயணிகள் அச்சமடைவதுடன், வாகனங்களில் பழுதும் ஏற்படுகிறது. எனவே, சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ