உள்ளூர் செய்திகள்

மின்நிறுத்தம் ரத்து

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி துணைமின் நிலையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்கலம், கருணாபுரம் உட்பட 26 கிராமங்களில் இன்று 21ம் தேதி மின்நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.நிர்வாக காரணங்களால் இன்று நடைபெறுவதாக இருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. இன்று வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை