உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெருமங்கலம் மாணவிகளுக்கு பாராட்டு

அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெருமங்கலம் மாணவிகளுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி : அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கை பெற்ற பெருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளை கலெக்டர் பாராட்டினார். கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டுகளில் பயின்ற மாணவிகள் அனுசுபா, கனிமொழி ஆகியோர் 2025ம் ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவி அனுசுபா நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியிலும், கனிமொழி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரியிலும் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளனர். அதேபோல் பெருமங்கலம் அரசு பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளிலும், துணை மருத்துவம் படிக்க அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் மற்றும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்ந்த மாணவிகள் அனுசுபா, கனிமொழி ஆகியோர் கலெக்டர் பிரசாந்தை சந்தித்து நேரில் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவிகள் இருவரையும் பாராட்டி வாழ்த்தினார். அப்போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை