உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலுாரில் வட்டார தேர்தல்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலுாரில் வட்டார தேர்தல்

ரிஷிவந்தியம் : அரியலுார் நடுநிலைப்பள்ளியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் நடந்தது.வாணாபுரம் அடுத்த அரியலுார் நடந்த வட்டார தேர்தலுக்கு சங்கராபுரம் வட்டார செயலாளர் சம்சுதீன், வட்டார தலைவர் தேவராஜ், மாநில தலைவர் லட்சுமிபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.மாநில துணைத் தலைவர் முத்தமிழன், செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஆசிரியர்கள் கோப்பெருஞ் செல்வன், தலைமை ஆசிரியர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் லுார்துசாமி வரவேற்றார்.பொருளாளர் முருகதாஸ் தேர்தல் நடைமுறைகளை விளக்கி பேசினார்.இதில், தலைவராக பட்டதாரி தலைமை ஆசிரியர் குரு அருள்ஜோன், செயலாளராக பழனிச்சாமி, பொருளாளராக ரமேஷ், துணைத் தலைவர்களாக ஏசுதாஸ், ஏழுமலை, துணை செயலாளர்களாக முத்துக்குமரன், கண்ணதாசன், மகளிர் அணி செயலாளராக வள்ளி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக ரவிச்சந்திரன், இருதயசாமி, மகேந்திரன், சாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வட்டார துணை செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ