மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கல்
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஞானசேகர் வரவேற்றார்.நிகழ்ச்சியில், நடப்பு கல்வியாண்டின் முதல் நாளில், பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்று, விலையில்லா பாட புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, தி.மு.க., நிர்வாகிகள் ராஜி, சிவமுருகன், செல்வகுமார், இதயதுல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.