உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தில் தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.பொதுக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய சேர்மன் அருணாசலம், அவைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அகிலாபானு அருள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி, சங்கராபுரம் தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி சோலை, ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம், ஊராட்சி தலைவர் வெங்கடேசன், கிளை அவைத் தலைவர் சுப்ரமணியம், ஒன்றிய துணைச் செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை