புனித விண்ணரசி உயர்நிலைப்பள்ளி மாணவி தடகள போட்டியில் சாதனை
மூங்கில்துறைப்பட்டு; ஈருடையாம்பட்டு புனித விண்ணரசி உயர்நிலைப்பள்ளி மாணவி தடகள போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.மாநில அளவிலான 65வது தடகள போட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி விளையாட்டு அரங்கத்தில் கடந்த 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 155 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் ரிஷிவந்தியம் ஒன்றியம், ஈருடையாம்பட்டு புனித விண்ணரசி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 9 ம் வகுப்பு மாணவி அஸ்மியா, உயரம் தாண்டும் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவி அஸ்மியாவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா பாராட்டினார். தொடர்ந்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ் மாணவிக்கு சால்வை அணிவித்து ரூ.5,000 பரிசு வழங்கினார். மேலும், கல்வி கட்டண சலுகை அளித்து பாராட்டினார். விழாவில், தலைமை ஆசிரியர் ஜெரோம், ஊராட்சி தலைவர் சிரஞ்சீவி, காரியக்காரர்கள், ஆசிரியர்கள், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.,