புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
சங்கராபுரம்: சங்கராபுரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. சங்கராபுரம் பஸ் நிலையத்தில் திருட்டு, அடிதடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.மேலும், பஸ் நிலையத்தில் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில் அந்த பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டி நகர பொது சேவை அமைப்புகள் சார்பில் அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.