தலைமை ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையைச் சேர்ந்த துரூர் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ். பணி ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது.வட்டார தலைவர் அமுதா தலைமை தாங்கினார்.வட்ட செயலாளர் ராஜா வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளர் மாநில தலைவர் மணிமேகலை ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் தங்கராசுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.விழாவில் மாநில செயலாளர் ரகிம், மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர், சவரிமுத்து, சுந்தர்ராஜன், பாத்திமா மற்றும் வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.