மேலும் செய்திகள்
பணி நிறைவு பாராட்டு விழா
29-Mar-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டார ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமி. இவர் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இவருக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா நடந்தது. வட்டார தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் லட்சுமிபதி, ஓய்வு பெறும் முத்துசாமிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் கள் முகமது கவுஸ், சீனிவாசன், அன்பழகன், இப்ராகிம், ராதாகிருஷ்ணன், சிட்டிபாபு, கணே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29-Mar-2025